பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது!
வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட முடியாது என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சர்வதேச பாதுகாப்பு மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு போதியளவு அதிகாரங்கள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் வாழ்கின்ற மக்களுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் எதுவும் செய்யவியலாது என வட மாகாண சபை அர்த்தமற்ற கூக்குரல் இடுகின்றது எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
பொலிஸ் அதிகாரம் அல்லாமல் ஏனைய அனைத்து அதிகாரங்களையும் போதியளவு பெற்றுக் கொடுத்துள்ளோம் எனவும், அதனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோருவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும், நடைமுறையிலுள்ளதை செயற்படுத்துவதே உசிதமான காரியம் எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
1 comments :
இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு மாகாண சபை தேவையே இல்லை , வீண் செலவு தான் மிச்சம் , அதைபோல் போலீஸ் அதிகாரம் கொடுப்பதானால் நாட்டில் 9 மாகாண சபைகள் உள்ள படியால் 9 போலீஸ் பிரிவுகள் செயல் படும் இது தேவை இல்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் , TNA போன்ற கிரிமினல்கள் தான் இதனால் பயன் அடைவார்கள், பொங்கு தமிழ் புகழ் பேராசிரியர் கணேசலிங்கம் , புலி வால் கள்ள பாதியார் போன்றோர் பெண்களை கற்பழிக்கும் போது TNA இடம் போலீஸ் சேவை இருந்தால் கோட்டுக்கு போகமலே கேசை இல்லாமல் செய்து விடுவார்கள்
Post a Comment