பத்து வயது மகளை சங்கிலியால் பிணைத்திருந்த தாய் கைது!
பத்து வயது மகளை சங்கிலியால் பிணைத்து வைத்திருந்த தாயொருத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டான பிரதேசத்திலுள்ள தாயொருத்தியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் பல திருமணங்கள் செய்து கொண்டுள்ளவர் எனவும், அவர் வெளியே போகும் வேளைகளில் சிறுமியை சங்கிலியால் பிணைத்துச் செல்வதும் வழமை என்பதை பொலிஸார் ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிந்துகொண்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment