சவர்க்காரக் கட்டியொன்று வாங்குவதற்கு இரண்டு கிலோ நெல் விற்க வேண்டியுள்ளது!
பொதுமக்கள் இன்று ஒரு சவர்க்காரக் கட்டி வாங்குவதற்காக இரண்டு கிலோ நெல்லை விற்க வேண்டிய நிலையில் உள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கின்றார்.
“அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வர வர செல்வந்தர்களாகிக் கொண்டே செல்கிறார்கள். மக்கள் வர வர .ஏழைகளாகிக் கொண்டே செல்கிறார்கள். முன்னர் நெல் ஒரு கிலோ விற்றால் சன்லைட் ஒரு துண்டு வாங்கலாம். தற்போது இரண்டு கிலோ நெல் விற்றால்தான் சன்லைட் ஒரு துண்டு வாங்கலாம்.
இன்று சீனி 1 கிலோ 110 ரூபா. அதனை வாங்கும்போது அரசாங்கத்திற்கு 28 ரூபா வரி கொடுக்க வேண்டும். அதாவது, நீங்கள் ஒவ்வொருநாளும் ஒரு தேனீர்க் கோப்பை குடிக்கும்போது சிந்திக்க வேண்டியுள்ளது. ¼ ராஜபக்ஷ அரசுக்கு வரி செலுத்த வேண்டியுள்ளதே என!” மொனராகலை ஹிதிகிவுல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment