பாதுகாப்புச் செயலரின் பேச்சைக் கேட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம்! - ராவண பலய
புத்தசாசன அமைச்சுக்கு சென்று படுக்கை விரிப்புகளுடன் போராட்டம் நடாத்திய ராவணபலய அமைப்பினர் அளுத்கம விவகாரத்தின் பின் மயான அமைதி காப்பதன் காரணம் பற்றி அவர்களிடம் சிங்களப் பத்திரிகையொன்று வினவியதற்கு பதிலளித்துள்ள அவ்வமைப்பின் தலைவர் சத்தாதிஸ்ஸதேரர், வன்முறைக்குச் செல்ல வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் வேண்டிக்கொண்டதற்கிணங்க தாம் தமது போராட்டங்களை அகிம்சை வழியில் தொடர்வதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தமது அமைப்போடு பாதுகாப்பு செயலாளர் பிரத்தியேகமாக உரையாடியதாகவும் தெரிவித்துள்ள அவர், தாம் மற்றவர்களைப் போன்றன்று நல்லதை யார் சொன்னாலும், அது ஒரு சிறு பிள்ளையாயினும் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 comments :
நல்லம்
ரகசியம்
Post a Comment