ஞானசாரர் கிராமத்தில் காவியுடை களைந்த, கொழும்பில் காவியுடை தரித்த தேரர்! - அமைச்சர் ராஜித்த
தனக்கு பெரும் குற்றம்சுமத்துகின்ற ஞானசார தேரர் கிராமத்தில் காவியுடை களைந்து, கொழும்புக்கு வந்து காவியுடை தரித்த ஒரு தேரர் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.
பொதுபல சேனாவினால் தனக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துரைக்கும்போது அமைச்சர், தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் ஞானசாரர் நிரூபிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான செயற்பாடுகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிடுகின்ற அமைச்சர், தேரர் பீ.எம்.டப்ளிவ் வாகனமொன்றில் தான் கேரள கஞ்சா வியாபாரம் மேற்கொள்வதாகக் கூறியிருக்கின்றபோதும் தன்னிடம் கடமைக்குச் செல்வதற்கான வாகனம் ஒன்று மட்டுமே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment