முஸ்லிம்களுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்! - இராணுவம்
எதிராக முஸ்லிம் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்தது.
குறுந்தகவல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக சமூகங்களுக்கிடையில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் தவறான தகவல்களை வழங்கி, வன்முறையை தூண்டும் வகையில் சில கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டார்.
மேலும், போலியான தகவல்களை பரப்புபவர்களை இனங்காண்பதற்காக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் கூறினார்.
இவ்வாறு வன்முறையை தூண்டும் விதத்தில் செயற்படும் குற்றவாளிகள் இனங்காணப்பட்டால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment