பட்டதாரி ஆசிரியர்கள் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதால் விசனம்!
பாடசாலைகளில் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களாக நியமிப்பதனால் அவர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், உள ரீதியாக பாதிப்புற்றுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிடுகின்றது.
பட்டதாரி ஆசிரியர்களின் கற்றல் - கற்பித்தல் தொடர்பில் அவர்களை ஆரம்பிப் பிரிவு ஆசிரியர்களுடன் பெற்றோர் ஒப்பு நோக்கி, பட்டதாரி ஆசிரியர்களில் அதிருப்தியுறுவதனால், பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் அவமானத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க குறிப்பிடுகிறார்.
அனைத்து மாகாணங்களினாலும் அண்மைக் காலமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஒப்பந்தங்களுடன் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களாக பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ளனர் எனத் தெளிவுறுத்துகின்றது இலங்கை ஆசிரியர் சங்கம்.
(கேஎப்)
0 comments :
Post a Comment