கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டங்களோ, எதிர்ப்பு ஊர்வலங்களோ நடாத்துவதற்கு, தடை!
கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்க ளில், ஆர்ப்பாட்டங்களோ, எதிர்ப்பு ஊர்வலங்களோ நடாத்து வதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுபலசேனா, சிங்கள ராவய, தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளுக்கு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம், இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இம்மூன்று அமைப்புகளும் இன்றைய தினம் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில், இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment