இலங்கை படையினருக்கான பயிற்சிகள் தொடரும் - ஸ்கொட்லாந்து பொலிஸார்
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு ஸ்கொட்லாந்து நாட்டின் பொலிஸாரினால் வழங்கப்படும் பயிற்சித்திட்டத் திற்கு 2015 வரை தொடரும் என்று ஸ்கொட்லாந்து பொலிஸ் உறுதியளித்துள்ளது. 2007ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் வரை சுமார் 3,500 இலங்கை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட தளபதிகள் ஸ்கொட்லாந்து பொலிஸ் கல்லூரியில் பயிற்சிகளை பெற்றுகொண்டனர்.
இத்திட்டமானது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஒரு புதிய தலைமைத்துவ கொள் கையினை முன்னேற்றமடைய செய்யும் என்று ஸ்கொட்லாந்து பொலிஸ் கல் லூரியின் முன்னால் கல்வி மற்றும் மேம்பாட்டு தலைவர் புரூஸ் மிலின் தெரி வித்துள்ளார்.
சர்வதேச பொலிஸ் பயிற்சியின் தரம் என்ற குறிக்கோளின் அடிப்ப டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு வெளிநாட்டு அலுவலக ங்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பில் எதிர்ப்புக்கள் தோன்றியுள்ள போதும், இலங்கை படையினருக்கான பயிற்சிகள் தொடரும் என ஸ்கொட்லாந்து பொலிஸ் கல்லூரியின் முன்னால் கல்வி மற்றும் மேம்பாட்டு தலைவர் புரூஸ் மிலின் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment