தலைமன்னார் புகையிரதம் எப்போது வரும்?
தென்னிந்தியாவில் இருந்து இறப்பர் தோட்டங்களிலும், தேயிலை தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக தொழிலாளர்களை கொண்டு வருவதற்காக தலை மன்னார் துறை முகத்துடன் இணைந்ததாக இப்பாதை அமைக்கப்பட்டது.
வடபுலத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக 1990 உடன் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் புகையிரத பாதை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. குறைந்த செலவில் பயணம் செய்யும் வாய்ப்பை மன்னார் பிரதேச மக்கள் இழந்தனர்.அது மட்டும் இன்றி அரச ஊழியர்களுக்கு வழங்கபபட்ட இலவச ஆணைச்சீட்டு(வரண்ட்) சலுகையையும் மன்னார் மாவட்ட அரச ஊழியர்கள் 24 வருடங்களாக இழந்து வருகின்றனர்.
சமாதானத்தின் பின்னர் இந்திய நிறுவனத்தால் மதவாச்சி தலை மன்னார் வீதி புதிதாக அமைக்கப்பட்டு மடு ரோட் வரை புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.2014 மார்ச்,ஏப்ரல் மாதமளவில் தலைமன்னார் புகையிரதம் செல்லும் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகின. ஆனால்,அது சாத்தியப்படாமல் போய்விட்டது.
அண்மையில் கருத்து வெளிவிட்ட இந்திய துணைத்தூதர் செப்டம்பரில் யாழ் புகையிரதமும் தலை மன்னார் புகையிரதமும் செல்லும் எனக்கூறி இருந்தார். பிந்திய தகவல்களின் படி டிசம்பரில் தலை மன்னாருக்கு புகையிரதம் செல்லும் என புகையிரத திணைக்கள செய்திகளும் கூறுகின்றன. வழி மேல் விழி வைத்து காத்துக்கிடக்கும் மன்னார் மக்களின் கனவு தலை மன்னார் புகையிரத சேவை எப்போது தொடங்கும் என்பது ஏக்கத்துடன் இருக்கும் இம்மக்களின் கனவுக்கு விரைவில் தீர்வு கிடைக்குமா?
இராமானுஜம்,லங்கா ராணி இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததான புகையிரத சேவை நடைபெற்ற அந்த வசந்த காலம் மீண்டும் பிறக்க பிரார்த்திக்கிறேன்.
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
0 comments :
Post a Comment