ஹரீனைத் தாக்கியதால் தயாசிரியுடன் கடுங்கோபமாக இருக்கிறாராம் டிலான் பெரேரா!
பதுளை பிரதேசவாசியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான ஹரீன் பிரனாந்து தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் தான் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கரவுடன் பெரும் கோபத்துடன் இருப்பதாக அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுகிறார்.
“யார் என்ன சொன்னாலும் ஹரீன் என்பவர் ஊவாவைச் சேர்ந்தராயிற்றே. ஹரீன் வத்தளை என்றாலும் திருமணம் முடித்து பதுளைக்குத்தானே வந்தார். தற்போது போட்டியிடுவதற்கும் அப்பகுதிக்குத்தானே. இங்குள்ள UNP ஆட்கள் ஹரீன் என்பவர் ஒரு சண்டியன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிரியின் வேலையினால் இன்று ஹரீன் சண்டியனாக அல்ல நொண்டியனாக இருக்கின்றார். பாவம் மனுஷன். வட மேல் மாகாணத்திலிருந்து வந்து ஊவாவிலுள்ளவனுக்கு எப்படி அடிப்பது? உண்மையிலேயே தயாசரியுடன் நான் மிகக் கோபமாக இருக்கின்றேன்.” என பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment