பொலன்னறுவையில் பெருஞ்சத்தத்துடனான வெளிச்சம்...! மக்கள் பெரும் பதற்றம்!!
பொலன்னறுவ, ஹிங்குரன்கொட வெலிகந்த பிரதேசத்தில் நேற்றிரவு (11) வானில் பெரும் சத்தத்துடன் பாரிய வெளிச்சமொன்று தரையை நோக்கி இறங்கியதாக கிராம வாசிகள் பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரிவித்துள்ளனர். இந்த பாரிய சத்தத்தினால் அப்பிரதேசத்தின் வீடுகளில் கதவு மற்றும் யன்னல்கள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன.
இத்தகவல் கிடைத்தவுடனேயே பொலிஸார், வான்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் வெளிச்சம் தோன்றிய இடத்தை நோக்கிச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
வான்படை ஊடகப் பேச்சாளர் விங்க் கமாண்டர் கிஹான் செனவிரத்ன இதுதொடர்பில் குறிப்பிடும்போது, இந்த வெளிச்சத்தை வான்படை முகாமிலுள்ள அதிகாரிகளும் கண்டுள்ளதாகவும், அவர்களும் அந்த வெளிச்சம் வந்த பிரதேசத்தை நோக்கி விரைந்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில், வானிலை அவதான நிலையம் கருத்துரைக்கும் போது, நேற்றிரவு பலமுறை மின்னல் வெட்டியதாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இது வட்டவடிவ மின்னலாக இருக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment