வெலிகம சதொசவுக்கு புதிய கட்டடம்!
இதுவரை வாடகை அடிப்படையில் வாங்கப்பட்ட வெலிகம நகரில் செயற்பட்ட “வெலிகம லக் சதொச” நாளை (27) சதொசவுக்கே சொந்தமான புதிய கட்டடத்தில் இயங்கவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வியாபார பிரதியமைச்சர் ஹேமால் குணசேக்கர குறிப்பிட்டார்.
தமது அமைச்சின் ரூபா 500 இலட்சம் நிதியொதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள “சதொச” புதிய கட்டடம் நாளை 27 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 3.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதுடன், முன்னர் சதொச இருந்த அதே இடத்தில் வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இது அமைக்கப்பட்டுள்ளதனால் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் ஹேமால் குணசேக்கர குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment