கயன்த போதை தலைக்கேறிய எலி மாதிரி கதைக்கிறார்…! - உதய கம்மன்பில
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயன்த கருணாதிலக்க மதுவருந்தி போதை தலைக்கேறிய எலி போன்று பேசுகின்றார் என மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிடுகின்றார்.
தேசிய கலாபவனில் இடம்பெற்ற கண்காட்சியொன்றில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நான் கயன்த கருணாதிலக்க ஊடகங்களில் தாங்கள்தான் ஊவா மாகாண சபையில் வெற்றிபெறுவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். எப்போதும் அவர் அப்படித்தான் சொல்கிறார். தேர்தல் முடிவு வரும்வரை ஐக்கிய தேசியக் கட்சி எங்கும் வெற்றி பெறுகின்றது. இதற்கு முன்னரும் வாய்க்கு வருபவற்றைப் பேசுகின்ற கயன்த ஆட்கள் தேர்தலில் மொனராகலையிலிருந்து 16%மும், பதுளையிலிருந்து 26%மும் தான் பெற்றார்கள். அப்படி வாக்குகளைப் பெற்ற அவரக்ள் இப்படிச் சொல்லும்போது எங்களுக்கு நினைவு வருவது என்னவென்றால், ஒருநாள் எலியொன்று சாராயம் குடித்து போதை தலைக்கேறி சண்டைக்கு வருமாறு பூனைக்கு சவால் விட்டதாம். கயன்த கருணாதிலக்கவுக்கும் அந்த போதை தலைக்கேறிய எலிக்குமிடையே எவ்வித வேறுபாடும் இல்லை என எனக்குத் தோன்றுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment