கவனிப்பாரற்ற நிலையில் பொகவந்தலாவ லெட்சுமி தோட்ட பிரஜாசக்தி கணனி நிலையம்! உதவிக்கரம் நீட்டுவாரா ஆறுமுகம் தொண்டமான்?
பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் தேயிலைத் தொழிற்சாலையின் அருகாமையில் இயங்கிவந்த பிரஜா சக்தி கணனி நிலையம் கடந்த 2010ம் ஆண்டு திருட்டுச் சம்பவத்தின் காரணமாக மூடப்பட்டது.
குறித்த கணணி நிலையத்தில் ஊடாக லெட்சுமி தோட்டம், பொயிஸ்டன் சாஞ்சி மலை, டியன்சின் றோப்கில் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கணனி அறிவினைப் பெற்றுக் கொள்ள வந்தபோதும் அது இடைநடுவில் குறித்த கணனி நிலையம் மூடபட்டு நான்கு வருடங்களும் 07 மாதங்களும் கடந்து விட்டதாக பிரதேசத்தைச் சேர்ந்தமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தற்பொழுது குறித்த கணனி நிலையத்தினுள் பொருத்தபட்டிருந்த கதவுகள் ஜன்னல் மற்றும் மின்சார உபகரணங்கள் ஆகியன களவாடப்பட்டு கவனிப்பாரற்ற நிலையில் லெட்சுமி தோட்ட கணனி நிலையம் காட்சியளிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் குறித்த நிலையத்தினைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.
குறித்த நிலையம் புத்துயிர் பெறுவதற்கு அமைச்சர் ஆறுமுகன் உதவிக்கரம் நீட்டுவாரா? என்ற எதிர்பார்ப்போடு பிரதேச மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment