ஹட்டன் நகர மீன் வியாபாரிகளுக்கும் நகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (27) புதன்கிழமை காலை ஹட்டன் பொது சந்தையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
மீன் வியாபாரிகள், ஹட்டன் பொது சந்தைக்கு வெளியே பாதையில் வியாபாரம் செய்தமைக்கு நகரசபை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டது.
தாம் குறித்த கடைகளை பணம் கொடுத்து ஏலத்தின் ஊடாக வாங்கியுள்ள நிலையில், அப்பிரதேசத்திலுள்ள நபரொருவருக்கு ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவரின் தனிப்பட்ட உதவியின் மூலம் குறித்த சந்தையில் கடை ஒன்றை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பாதையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு நகரசபை தலைவரின் மூலம் பெறப்பட்ட குறித்த கடையை அகற்றும் வரை தாங்கள் பாதையில் வியாபாரம் செய்வதாக மீன் வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)
No comments:
Post a Comment