Sunday, August 24, 2014

மிகச் சிறப்பாக நடைபெற்ற பெரிய நீலாவணை ஸ்ரீநாககன்னி தேவஸ்தான வருடாந்த உற்சவம்! (படங்கள் இணைப்பு)

கல்முனை பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்பாள் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தையொட்டி பால் குட பவனியுடனான பாலாபிஷேக பெருவிழாவும் நாட்டில் நிரந்தர அமைதி சமாதானம் வேண்டி விசேட பூசை வழிபாடுகளும் நேற்று (23) சனிக்கிழமை இடம் பெற்றது.

பெரிய நீலாவணை ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தானத்திலிருந்து அடியார்களின் பால் குட பவனி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி தேவஸ்தானத்தை சென்றடைந்து அங்கு வழிபாடுகளும் பாலாபிசேக பெருவிழாவும் இடம் பெற்றன.

அடியவர்கள் தங்களின் நேர்த்தியை நிறைவேற்ற தீச்சட்டி,நெய் விளக்கு, பாற்குடம் சுமந்து பவனியாக சென்று பாலாபிசேகம் செய்தனர். பால் குட பவனியில் பெரியநீலாவணயை சேர்ந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

(கல்முனை இஷ்ஹாக்)

No comments:

Post a Comment