ஆசிரியை முழந்தாளிடச் செய்த வழக்கின் முக்கிய சாட்சியின் மரணம் தொடர்பில் ஐவர் கைது!
நவகத்தேகம நவோத்ய பாடசாலை ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான ஆசிரியையை முழந்தாளிடச் செய்த வழக்கின் முக்கிய சாட்சியின் சடலம் சென்ற 2 ஆம் திகதி பாடசாலைக்கு அருகில் உள்ள கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது தொடர்பில், நவத்தேகம பொலிஸார் ஐவரைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
கிணற்றில் சடலமாகக் கிடந்தவர் ஆர்.எச்.எம். புன்யசேன பண்டார (55) என்பவராவார்.
புத்தளம் நீதவான் நீதிமன்ற வழக்கறிஞர் அசோக்க ரணசிங்கவின் கட்டளையின் பேரில் மரண விசாரணை நடாத்திய ஹலாவத்த நீதிமன்ற வைத்திய அதிகாரி டீ.கே. விஜேவர்த்தன மரணத்திற்கான காரணத்தை திட்டவட்டமாகக் கூறமுடியாது எனக் குறிப்பிட்டுள்ளதுடன் அதற்கான காரணத்தை பின்னர் அறிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment