வீட்டில் சங்கிலியால் கட்டப்பட்ட சிறுமி மீட்பு!
சங்கிலியால் கட்டப்பட்டு வீட்டில் கட்டி வைக்கப்பட்ட சிறுமி ஒருவரைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் நீர்கொழும்பு கொச்சிக்கடை, போகலப் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சிறுமிக்கு அகவை 10 எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாயே இவ்வாறு மகளைக் சங்கிலியால் கட்டி வைத்து துன்புறுத்தி வந்து ள்ளார் எனக் கூறப்படுகின்றது. கொச்சிக்கடை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு, குறித்த சிறுமி மீட்டுள்ளனர். எனினும் தாய் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மகளை இவ்வாறு சங்கிலியால் கட்டிவைத்து துன்புறுத்திய தாயைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர். மகளைத் துன்புறுத்திய தாய்க்கு சட்டத்தின் முன் நிறுததப்பட்டு தண்டணை வழங்கப்படும் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். தற்போது அச்சிறுமி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, காவல்துறை யினர் அவரைப் பொறுப்பெடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment