Sunday, August 24, 2014

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததில் யாழ்.மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் விசாரணையில்

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த விவகாரத்தில் யாழ்.மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் விசாரணைகளிற்கு உள்ளாகியுள்ளார். நல்லூரில் தனது பங்களாவிற்கு முன்னதாகவுள்ள பல மில்லியன் பெறுமதியான காணியொன்றை அண்மையில் கொள்வனவு செய்துள்ள நிலையில்

அது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில் இலங்கை வருமான வரி திணைக்களத்தின் விசாரணைகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.


குறித்த காணியினை கொள்வனவு செய்வதற்கான வருமான வருகையினை தெளிவுபடுத்த கோரியே அவர் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். சாதாரண பாடசாலை ஆசிரியையாக இருந்திருந்த அவரிடம் குறித்த ஒரு சில ஆண்டுகளில் எவ்வாறு வருமானம் ஈட்டிக்;கொண்டார் என்பது தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளதாக தெரியவருகின்றது.


ஏற்கனவே யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் மற்றும் பெருமளவிலான காணிகளை அவர் கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் அவரது முன்னாள் சகபாடியும் மாநகரசபை உறுப்பினராக இருந்து வெளியேற்றப்பட்டவரும் தற்போது அவருடன் முரண்பட்டு செயற்பட்டுவருபவருமான விஜயகாந்த் தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார்.


இதனிடையே மாநகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வடமாகாணசபை முதலமைச்சர் ஓய்வு பெற்ற நீதிபதியொருவரை நியமித்திருந்தார். இந்த நியமனத்தின் போது முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சி.வீ.கே சிவஞானத்தின் காலத்திலும் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக யோகேஸ்வரி குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com