நல்லூர் கோயிலை அவமதித்த விக்கி! நீதி என்பது அனைவருக்கும் சமம்!
நீதி என்பது அனைவருக்கும் சமம் என்பதை பாடமாகவே கற்று செயற்பட்ட ஒரு நீதியரசரசரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நல்லூருக்குள் தனது வாகனத்தில் உலா வந்து அங்கு நின்ற பக்தாகளை விசனப்படுத்தியுள்ளார்.
வாகனத் தடையையும் மீறி உள்ளே நுழைந்து இவ்வாறு செயற்பட்டுள்ளது அவரது முறையற்ற செயற்பாட்டைக் காட்டுகின்றது என யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிகழ்வுகளுக்கு பங்கு பற்றி பிரபலப்படுத்தவா மக்கள் உங்களை முதலமைச்சா பதவிக்கு தெரிவு செய்தார்கள்? என அங்கிருந்த பக்தாகள் சத்தம் போட்டனர். என்றும் ஒரு சில மீற்றாகள் நடந்து வர அலுப்புப்படும் ஒருவர் எவ்வாறு மக்களை சந்தித்து பிரச்சனைகளைத் தீhக்கப் போகின்றார் என்றும் அங்கு நின்ற மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்றும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
நல்லூர் பகுதியில் உள்ள தற்காலிக வாகனத் தடையில் இருந்து சில மீற்றா தூரத்தில் உள்ள ஒரு தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்வு ஒன்றிற்கே இவா இவ்வாறு வந்துள்ளார்.
மேவின் சில்வா நல்லூருக்குள் வாகனத்தில் வந்தமை அண்மையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.br />
0 comments :
Post a Comment