ஒரு குடும்பத்தை வெளியேற்றக் கோரி வேலை நிறுத்த போராட்டம்! (படங்கள்)
தலவாக்கலை கிறெட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 ற்கும் மேற்ப்பட்ட அத்தோட்ட பொதுமக்கள் குறித்த குடும்பத்தை அத்தோட்டத்திலிருந்து வெளியேற்றுமாறு கோரி 20.08.2014 அன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த தோட்ட த்தில் பொது மக்களுக்கு எதிராக பல வருடங்களாக குறித்த ஒரு குடும்பம் பல கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாகவும் பொய் புகார்களையும் முறைபாடு களையும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதோடு கடந்த வாரம் இத்தோட்டத்திலுள்ள 9 இளைஞர்களுக்கு எதிராக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அவர்கள் 19-08-2014 அன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் தலா 2500 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என தெரிவிக்கின்றனர்.
இதனால் கொதித்தெழுந்த இத்தோட்ட பொதுமக்கள் அக்குறித்த குடும்பத்தை அத்தோட்டத்திலிருந்து வெளியேற்றும்படி கோரி ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர்.
இக்குறித்த குடும்பத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக 1995 ஆம் ஆண்டு இத்தோட்ட மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு இக்குடும்பம் இத்தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இருந்தும் இவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டில் மீண்டும் தஞ்சம் புகுந்த இக்குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் பொதுமக்களுக்கு எதிராக பல வழிகளில் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக அத்தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
இவர்கள் இத்தோட்டத்தில் நிரந்தர தொழிலாளர்களாகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மத்தியில் ஏற்ப்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்துக்கு வருகைத்தந்த அத்தோட்ட முகாமையாளர் கோசல விஜேசேகர, தலவாக்கலை பொலிஸ் நிலைய அதிகாரி பிரதீப் குமார,லிந்துல பொலிஸ் நிலைய அதிகாரி செல்வகுமார் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாநில இயக்குனர் லோகதாஸ் ஆகியோர் பொதுமக்களுடனும் அக்குறித்த அக்குடும்ப உறுப்பினர்களுடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து அக்குடும்பத்தை மாலை 4 மணிக்கு முன்பதாக அத்தோட்டத்திலிருந்து வெளியெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment