மகிபால ஹேரத்தின் பாதுகாவலரால் 17 வயது யுவதி பாலியல் வல்லுறவு!
சபரகமுவ முதலமைச்சர் மகிபால ஹேரத்தின் பாதுகாவலர் ஒருவரினால் 17 வயது யுவதியொருத்தி பாலியல் வல்லுவறவுக்கு உட்படுத்தபட்டுள்ளாள். இதுதொடர்பில் குறித்த சந்தேகநபரை ஹிங்குரன்கொட பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்செய்துள்ளனர்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட யுவதியின் பாட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவு தொடர்பில் யுவதியின் பாட்டி பொலிஸில்,
“சபரகமுவ முதலமைச்சரின் காணியொன்று இங்குள்ளது. அதனைப் பார்த்துக் கொள்வதற்காக பொலிஸ் அதிகாரியொருவர் இருந்தார். குறித்த நாளில் நாங்கள் வீட்டில் இருக்கவில்லை. அந்த அதிகாரி காலை 10.00 மணிக்கு வீட்டுக்கு வந்து எனது பேர்த்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். பிறகு நாங்கள் இதுதொடர்பில் ஹிங்குரன்கொட பொலிஸில் முறைப்பாடு செய்தோம். அந்த முறைப்பாட்டை விசாரிக்கவும் இல்லை. அதிகாரியைக் கைது செய்யவும் இல்லை. ஆயினும் மகிபாலவின் ஆட்கள் எங்கள் வீட்டுக்கு வந்து, பேர்த்தி பொலிஸ் அதிகாரியுடன் காதல் கொண்டதாக சொல்லுமாறு சொன்னார்கள். அதுமட்டுமன்றி முறைப்பாட்டை எடுத்துவிடுமாறு கூறினர். பேர்த்திக்கு வயது 17. அதிகாரிக்கு 49 வயது. நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதனை அநியாயம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே” என முறைப்பாடு செய்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment