நான் தேர்தலில் போட்டியிட்டால் எனக்கு ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கும்! - அநுர சேனாநாயக்க
தான் நூறு வருடங்கள் பொலிஸ் சேவையில் பணியாற்றுவதற்கும் பொதுமக்கள் விருப்பம் தெரிவிப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவிக்கிறார்.
வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவுக்கு பாதுகாப்பு வேண்டி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே அவர் நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
தான் தேர்தலில் ஈடுபட்டால் ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் தனக்கும் கிடைக்கும் எனவும், மக்கள் தனது பணிகளை மிகவும் விரும்புவதாகவும் சேனாநாயக்க நீதிமன்றில் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment