யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தாதிமார் 800 பேர் குறைபாடாம்!
யாழ்ப்பாண நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதிக்காக தாதியர்கள் 800 பேர் அளவில் குறைபாடு உள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்த ராஜா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வைத்தியசாலையில் தாதியர்கள் 400 பேரே சேவையில் இருப்பதாகவும், வைத்தியசாலைக்குத் தேவையான தாதியர் தொகை 1,200 எனவும் குறிப்பிடுகின்ற உதவிப் பணிப்பாளர் அவர்களுள் 200 பேருக்கு மட்டுமே விடுதி வசதி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு ஆய்வுக்காக சென்றிருந்த ஊடகவியலாளர்கள் சிலரிடமே உதவிப் பணிப்பாளரான வைத்தியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வைத்தியர்கள் 80 வீதமானோர் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாதியருக்கான விடுதி வசதியே பெரும் பிரச்சினையாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ள அவர், வைத்தியர்களுக்கும் சிறப்புத் தேர்ச்சிமிக்க வைத்தியர்களுக்கும் கூட விடுதி வசதி பிரச்சினையாகவே இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
( கேஎப்)
0 comments :
Post a Comment