6 மாகாணங்களில் 10,400 போலி வைத்தியர்கள்!
நாடெங்கிலும் 6 மாகாணங்களில் மேற்கொண்ட ஆய்வில், வைத்தியர்களாக நின்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்ற போலி வைத்தியர்கள் 10,400 பேரின் தகவல் வெளிச்சத்து வந்துள்ளதாக அரச வைத்தியர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேல், தென், ஊவா, வட, சப்ரகமுவ, வட மத்திய மாகாணங்களிலும் குருணாகலை பிரதேசத்திலும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டதாக அரச வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அநுருத்த பாதெணிய, கொழும்பு ஸ்டென்லி விஜேசுந்தர மாவத்தையிலுள்ள சங்க அலுவலத்தில் இதுதொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்களாக இருப்போரில் சிலர் சமூகத்திலுள்ள பிரபலங்களுடன் தொடர்புற்று அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொண்டு தங்களது வேலைகளையும் செய்துவருவதாக, ஆய்வினை மேற்கொண்ட வைத்தியர் ஹரீன் அளுத்கே ஆய்வில் தெரிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வைத்தியர்களாக முகமூடி தரித்த வஞ்சகத்தன்மை மிக்கோர் கட்டுநாயக்க மற்றும் பியகம பிரதேசங்களிலேயே அதிகம் உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள அச்சங்கத்தின் தலைவர், சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் பணிபுரிகின்றோரில் அதிகமானோர் அப்பகுதி விடுதிகளிலேயே தங்கியிருப்பது அதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment