பிரேமகீர்த்தியின் மனைவியிடம் ரூபா 50 கோடி கோரி “நோட்டீஸ்” அனுப்பியுள்ளார் ஹட்ஸன்!
காலஞ்சென்ற பிரேமகீர்த்தி த அல்விஸ் கொலை தொடர்பில் தற்போதைய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்ஸன் சமரசிங்க பொறுப்புச் சொல்ல வேண்டும் என பிரேமகீர்த்தி த அல்விஸின் மனைவி நிர்மலா அல்விஸ் குறிப்பிட்டிருந்ததனால், தனக்கு ரூபா 50 கோடி மானபங்க நட்டஈடு வழங்க வேண்டும் எனக் கூறி ஹட்ஸன் சமரசிங்கவினால் நிர்மலா அல்விஸுக்கு “நோட்டீஸ்” அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நிர்மலா அல்விஸினால் வார இறுதிப் பத்திரிகையொன்றில் ஹட்ஸன் சமரசிங்க பிரேமகீர்த்தியின் கொலைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டு “ஜனாதிபதியே, பிரேமகீர்த்தியின் கொலைகாரன் உங்கள் நிழலிலேயே” என்ற தலைப்பில் கட்டுரையொன்று எழுதியிருந்தையும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த இந்தத் தொகையைத் தனக்கு தராதவிடத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment