ஊவா தேர்தல் தினத்தன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகள் பற்றியும் 30 நிமிடத்திற்கு முன்னர் சொல்லவும்! - தேர்தல் ஆணையாளர்
ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி மற்றும் அதற்கு முன் தினம் வாக்களிப்பு நிலையங்களில் நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் 30 நிமிடங்களுக்கு முன்னர் தனக்கு அறியத் தருமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கும், தொடர்புடைய அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.
இதற்காக பிரதேச ஒருங்கிணைப்பு அலுவலகங்களை அமைக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அனைத்து பிரதேச ஒருங்கிணைப்பு நிலையங்களையும் பிரதேச செயலகங்களில் நிறுவுமாறும் மகிந்த தேசப்பிரிய சுற்றுநிரூபத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளரின் ஆலோசனைப்படி அமைக்கப்படுகின்ற பிரதேச ஒருங்கிணைப்பு அலுவலகங்களுக்காக சிரேட்ட தேர்வு அதிகாரி ஒருவரும், உதவிக் குழுவொன்றும், பொலிஸ் அதிகாரிகளையும் சேவைக்காக நிறுத்துமாறும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment