Friday, August 15, 2014

நாடெங்கிலும் 2,870 மத்திய நிலையங்களில் புலமைப் பரிசில் பரீட்சை!

நாளை மறுதினம் நடைபெறவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடெங்கிலும் 2,870 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 335,585 மாணவர்கள் இப்பரீட்சையை எழுதவுள்ளனர்.

புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன், அன்று மு.ப. 9.30 இலிருந்து 10.15 வரை முதலாவது வினாப்பத்திரத்திற்கும், மு.ப. 10.45 இலிருந்து 12.00 வரை இரண்டாவது வினாப்பத்திரத்திற்கும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.

புலமைப்பரிசில் பரீட்சைக்காக 24 மணித்தியாலங்களும், ஒருங்கிணைப்பு நிலையங்கள் 497 செயற்படவுள்ளதுடன், புலமைப் பரிசில் பரீட்சை முடியும்வரை பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துதல், மற்றும் அதற்காக ஒருங்கிணைப்புக்கள் செய்வது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு எதிராக செயற்படுவோர் பற்றித் தெரியவந்தால் 0112 784 208 / 0112 784 537 / 1911 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ 119, 0112 421 111 எனும் இலக்கங்களுக்கோ அறியத்தருமாறு பரீட்சைகள் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com