யானைக் குட்டியைக் கடத்திய இருவர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..!
மூன்று வயது யானைக்குட்டியொன்றை லொறியொன்றில் கடத்த முற்பட்டபோது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு மாத்தளை நீதிமன்ற நீதவான் சம்பத் கமகே இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
கண்டி - மாத்தளை பிரதான வீதியில் மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் வைத்து லொறி ஒன்றினை நேற்று முன்தினம் (12)சோதனையிட்டபோது சட்ட விரோதமான முறையில் அனுமதிப் பத்திரமின்றி லொறியொன்றில் யானை குட்டியொன்றை கொண்டு செல்ல முற்பட்டமை தெரியவந்ததும் சந்தேகநபர்கள் இருவரை மாத்தளை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment