ஏறாவூரில் ஒரே இரவில் நடந்த கொடூரம்! 24 ஆண்டுகள் நிறைவு!
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஏறாவூரில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளினால் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு கூரும் 24வது ஆண்டு ஷூஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட் டது.
1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி நள்ளிரவு ஆழ்ந்த நித்திரையில் இருந்த முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் கூரிய ஆயுதங்களால் வெட்டியும் கொலை செய்தனர். இதில் பெண்கள், கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள், வாலிபர்கள், வயோதிபர்கள் உட்பட 121 பேர் அடங்கியிருந்தனர்.
கர்ப்பிணித் தாய்மாரின் வயிறு கிழிக்கப்பட்டு சிசுக்கள் வெளியே எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த கோரச் சம்பவங்கள் வரலாற்றில் அழிக்க முடியாத தடயங்களாக காணப்படுகின்றன. இச்சம்பவம் இடம்பெற்ற போது மின் விநியோ கமும் துண்டிக்கப்பட்டிருந்தது.
அந்த கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க தாகும். ஏறாவூர் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். செய்யித் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் புனித குர்ஆன் பாராயணம் விஷேட பிரார்த்தனை மற்றும் நினைவு உரைகளும் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment