ஊவா மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 20 இல்!
ஊவா மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
ஊவா மாகாண சபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் நடைபெறவுள்ள திகதியை அறிவித்துள்ளார். பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்களில் இன்றும் பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இந்த வேட்புமனுக்கள் தொடர்பில் ஆராயப்பட்டதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் அறிவிக்கவுள்ளார். ஊவா மாகாண சபைக்கு 32 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பதுளை மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்களும் மொனராகலை மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும் ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். ஊவா மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 9,42,730 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment