1951 ஆம் ஆண்டு ஐ.நா. பிரகடனத்தில் நாம் கையெப்பமிடவில்லை! ஐ. நா. வின் கருத்து முற்றிலும் தவறானது!
1951 ஆம் ஆண்டு அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் நாம் கையொப்பம் இடவில்லை. சுற்றுலா வீசா பெற்று இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர் களுக்கு அகதி அந்தஸ்தை வழங்க அரசாங்கம் தயார் இல்லையென இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் தாபனம் கூறும் அந்த கருத்து முற்றிலும் தவறானது. 1951 ஆம் ஆண்டு ஐ.நா பிரகடனத்தில் நங்கள் அதன் பங்காளர்களாக இருக்கவில்லை. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. எழுத்து மூலமான உடன்படிக்கை யிலும் நாங்கள் பங்காளர்கள் அல்ல.
அரசாங்கத்தின் நியதிப்படி ஒரு மாதத்திற்கோ 3 மாதத்திற்கோ இங்கு தங்குவதற் கான சுற்றுலா வீசா வழங்க முடியும். அந்த காலக்கட்டத்தில் கூடுதலாக இருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். சுற்றுலா பயணிகளாக வந்து அகதிகள் அந்தஸ்தை கோருகின்றார்கள். சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்புவதற்கோ அந்த நாட்டுக்கு நாடுகடத்த முடியாதென்பதை அவர்கள் கூறுகிறார்கள்
1 comments :
U.N is always wrong with Sri Lanka and other some countries, U.N act as like a U.S.A goverment department, U.N is waste for this world and must be closed.
Post a Comment