மதவிவகாரங்களை விசாரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு இதுவரை 176 முறைப்பாடுகள் மட்டுமே!
புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு இந்நாட்டில் ஏற்பட்ட மதப் பிளவுகள் தொடர்பான முறைப்பாடுகள் 176 மட்டுமே கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.
அதில் 45 கிராண்ட்பாஸில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பானது எனக் குறிப்பிட்டுள்ள அவ்வமைச்சின் செயலாளர் எம்.கே.பீ. தசநாயக்க, அதிகமான முறைப்பாடுகள் 2013 இலேயே வந்ததாகவும் அவற்றில் பெரும்பாலானவை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் மதப்பிளவுகள் அதிகம் நிகழ்கின்றன என சிலர் குறிப்பிட்டாலும், இம்முறைப்பாடுகளைப் பார்க்கும்போது அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment