14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர் கைது!
14 வயது சிறுமியொருத்தியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் எனும் சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை சிறையில் இடுமாறு மன்னார் நீதவான் செல்வி ஆனந்தி கனகரத்னம் கட்டளையிட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறுமியும், குறித்த இராணுவ வீரரும் இராணுவ முகாமுக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதிக்குச் செல்வதை ஊர் மக்களிற் சிலர் கண்டு பெற்றோரிடம் அறிவித்திருக்கின்றனர். பின்னர் சிறுமியின் தாய் மன்னார் பொலிஸ் இதுதொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுமியின் கைவசம் வைத்திருந்த கைத்தொலைபேசி இலக்கம் ஒன்றை அடிப்படையாக வைத்து, மன்னார் சவுத்பார் இராணுவ முகாமில் சேவை செய்கின்ற இராணுவ வீரரைக் கைது செய்துள்ளனர். சந்தேகநபரான இராணுவ வீரர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், சிறுமியுடன் தொடர்ந்து மூன்று மாதங்களாக நட்பு பாரா்ட்டி வருவதாகவும் மன்னார் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment