ஒரே இரவில் 147 உயிர்களை காவுகொண்ட புலிப் பாசிசம்! 24 ஆண்டுகள் நிறைவு!
காத்தான்குடியில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த 147 முஸ்லிம்கள், எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் மிலேச் சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டு, இன்றுடன் 24 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அன்றைய நாள் கடமைகளை ஆரம்பித்தனர். மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் அப்பிரதேசத்தை காரிருள் சூழ்ந்து கொண்டது.
நேரம் இரவு 7.30 அளவில் ஹூஸைனியா பள்ளிவாசல் மற்றும் மீரா ஜூம்ஆ பள்ளிவாசல் உட்பட அப்பகுதிகளில் உள்ள சகல பள்ளிவாசல்களிலும் மக்கள் இரவு இஷா தொழுகைக்காக ஒன்றுகூடினர். இறைவனை வணங்கிக்கொண்டிருந்த அந்த மக்கள் எதிர்பாராத வகையில், பாரிய அனர்த்தமொன்று ஏற்படுமென, எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
பள்ளிவாசலில் மின்சாரம் திடீரென தடைப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிவாசலுள் புகுந்த எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள், கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். துப்பாக்கி ரவைகள், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களை பதம்பார்த்தன. பள்ளிவாசல் வளவெங்கும் இரத்த வெள்ளம் ஆறாக ஓடியது. மக்கள் கூக்குரலிட்டு, அப்பிரதேசமே பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. அங்கு புலிகள் மேற்கொண்ட கொடூர தாக்குதலில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 147 முஸ்லிம்களின் உயிர்களை பதம்பார்த்தது. 110 க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்தனர்.
அந்த கொடிய தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய புலிகளின் தலைவர் உட்பட ஏனைய புலிப் பயங்கரவாதிகளுக்கு, இறைவன் தண்டனையை வழங்கிவிட்டான். இந்த படுகொலைக்கு 24 ஆண்டுகள் பூர்த்தியாகும் இன்றைய தினம், அப்பள்ளி வாசல் வளவில் கூடிய காத்தான்குடி மக்கள், இறந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். அத்துடன் மேலும் பல சமய நிகழ்ச்சிகளுமு; ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற அனர்த்தமொன்று ஏற்படக்கூடாது என்பதே, அவர்களது பிரார்த்தனையாக அமைந்திருந்தது.
இதேநேரம், தேசிய சுகதாக்கள் நிறுவனம் ஏற்பாடு செய்ஜத விசேட நிகழ்வு, காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது. இப்படுகொலையில் மரணித்தவர்களுக்கு ஈடேற்றம் வேண்டிய கத்முல் குர்ஆன் ஓதும் வைபவமும், விசேட துஆப் பிரார்த்தனையும் வழங்கப்பட்டது, பிரதிய மைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவும் வழங்கப்பட்டது, காத்தான்குடி மெத்தைப்பள்ளி பேஷ் இமாம் மௌலவி ஏ.ஜீ.எம். அமீன் பலாஹி, விசேட துஆப் பிரார்த்தனைய நடாத்தி வைத்தார். எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளினால் இதேதினம், மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் நினைவாக விசேட கத்முல் குர்ஆன் ஓதும் வைபவமும், விசேட துஆப் பிரார்த்தனையும் இப்பள்ளிவாசலில் இடம்பெற்றமை, குறிப்பிட்ததக்கது.
0 comments :
Post a Comment