ஞானசாரர் 14 நாட்களுக்குள் ரூபா ஒரு பில்லியன் நட்டஈடு வழங்க வேண்டும்.. இல்லையேல் நடவடிக்கை! (கடித நகல் இணைப்பு)
ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு கேட்டு கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
தனது சட்டத்தரணியூடாகவே இந்தக் கடிதம் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளருக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அக்கடிதத்தில் "நீங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பற்றிய பொய்யான விடயங்களை முன்வைத்தீர்கள். அதனால் அவரது நற் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது" என ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஞானசாரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அமைச்சர் ராஜித்த பற்றிய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்க உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அமைச்சர் புத்தளம் மாவட்டத்தில் நடக்கும் கேரள கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ளமையை நிரூபிக்க முடியும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.
0 comments :
Post a Comment