தேசிய சுதந்திர முன்னணி சமர்ப்பித்த 12 விடயங்களுக்கும் இணக்கம் தெரிவித்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி!
தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் சமர்ப்பித்த 12 பிரேரணைகள் தொடர்பாக ஆராய்வதற்கு, நியமிக்கப்பட்ட குழு, இன்று கூடியது. இந்தக்குழு தேசிய சுதந்திர முன்னணியின் அங்கத்தவர்களுடன் அடங்கியிரு ந்தது. இரு தரப்பினருக்கு மிடையிலான சந்திப்பு, ஜனா திபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர்களான மைத்ஜதிரிபால சிறிசேன, பெசில் ராஜபக்ச, அநுர பிரியதர்சன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட பிரதிநிதிகள் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் கலந்ஜது கொண்டனர்.
தேசிய சுதந்திர முன்னணி சமர்ப்பித்த 12 விடயங்களுக்கும் இணக்கம் தெரிவித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் கடிதமொன்றுமு; வழங்கப்பட்டது. இந்த சந்திப்பு தொடர்பாக, அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment