முதியோர்களுக்கு உணவு கொடுப்பனவாக மாதாந்தம் 1000 ரூபா வழங்கும் நிகழ்வு!
டயகம பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்கு தோட்டங்களில் கவனிப்பாரற்ற நிலையில் வாழும் முதியோர்கள் சிலர் இனங்காணப்பட்டு, அவர்களுக்கான உணவு கொடுப்பணவாக மாதாந்தம் ரூபா. 1000 வழங்கும் நிகழ்வு இன்று (28)டயகமவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை டயகம மேற்கு கிராம அபிவிருத்தி சங்கமும், டயகம பொலிஸ் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததோடு, அதிதிகளாக பெரண்டினா அபிவிருத்தி சேவைகளின் சிரேஸ்ட முகாமையாளர் திரு. ரஹீம், திட்ட உத்தியோகஸ்த்தர் திரு. சிவகாந்த், டயகம கிழக்கு தோட்டத்தின் முகாமையாளர் திரு. சந்தன, டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. ஹேரத் மற்றும் பாடசாலை அதிபர்கள், நகர வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment