1 கோடி ரூபாவுக்கு இடிதாங்கியை விற்பனை செய்ய முயன்றவர் கைது! (2ஆவது இணைப்பு)
200 வருடங்கள் பழைமை வாய்ந்ததாக நம்பப்படும் நோர்வூட் அயரபி தனியார் தோட்டத்தில் இருந்த இடிதாங்கி ஒன்றை 1 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை கம்பளை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கினிகத்தேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் இடிதாங்கியை ஹட்டனிலிருந்து கொழும்புக்கு கொண்டு செல்லும்போது ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் வந்த காரை சோதனைக்குட்படுத்தும்போது இவ்வாறு சட்டவிரோமாக கொண்டு செல்வது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய பின், சந்தேகநபரையும் இடி தாங்கியையும் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அத்தோடு குறித்த காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரையும் இடிதாங்கி மற்றும் காரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர் என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)
இரண்டாவது இணைப்பு
நேற்று (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் அமில ஆரியசேன முன் நிறுத்தியபின்னர், நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் முதலாம் (01.09.2014)திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தோட்ட அதிகாரியின் அநுமதியுடனேயே இடிதாங்கியை எடுத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment