ஆசிரியருக்கு மாணவி அனுப்பிய காதல் SMS ஆல் பரபரப்பு... யாழ் பிரபல பாடசாலையில் சம்பவம்!!
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி. குறித்த ஆசிரியர் க.பொ.த சாதாரண தரத்தின் கீழ் உள்ள மாணவர் களுக்கு கல்வி கற்பித்து வருவதாகவும் வன்னிப் பகுதியில் இருந்து அண்மையில் இடமாற்றம் பெற்று அப் பாடசாலையில் கல்வி கற்பித்து வந்ததாகவும் தெரியவரு கின்றது.
மாணவ தலைவர்களில் ஒருவராக உள்ள குறித்த மாணவி இவ் ஆசிரியரிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுள்ளார். எதற்காக எனக் கேட்ட போது ஆசிரியர் ஒருவரைப் பற்றி சொல்வதற்கு எனக் கேட்டு வாங்கி தனது இலக்கத்தையும் கொடுத்ததாகத் தெரியவருகின்றது. அதன் பின்னர் ஆசிரியருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தனது காதலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவ் ஆசிரியர் உடனடியாகவே மாணவிக்கு தொடர்பு எடுத்து ஏசிய போது தன்னைக் காதலிக்கா விட்டால் தற்கொலை செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அதிபருடன் கலந்தாலோசித்த ஆசிரியர் குறித்த மாணவியின் வீட்டுக்கு அதிபருடன் சென்று மாணவியின் நிலையைச் சொல்லியுள்ளதாகத் தெரியவருகின்றது, தற்போது குறித்த மாணவி பாடசாலை வராது வீட்டில் நிற்பதாகவும் தனது நண்பிகளிடம் குறித்த ஆசிரியர் தன்னைக் காதலிப்பதாக தவறான முறையில் எஸ்.எம்.எஸ் அனுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தால் அப் பாடசாலையின் குறிப்பிட்ட சில வகுப்புக்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment