இந்தியாவுக்கே எச்சரிக்கை விடும் த.தே.கூ!! இலங்கைத் தழிழர்களை சிக்கலில் மாட்டுவNது முழு நோக்கம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான சுரேஷ் பிரே மச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் இனப் பிரச்சினைக்கு இந்தியா சரியான கொள்கை திட்டமிடல் களை மேற்கொள்ளாவிட்டால் தமிழ் மக்கள் தமது பாது காப்பையும் தமது இருப்பையும் தமது தனித்துவத்தையும் தக்கவைத்து கொள்ளவும் தமக்கு உரித்தான உரிமைகளை நிலைநாட்டி கொள்ளவும் தமக்கு ஆதரவு அளிக்கும் சக்திகளுடன் இணைந்து செயற்படும் நிலைக்கு செல்வது தடுக்க முடியாததாகிவிடும் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தியாவுக்கு விடுக்கும் இந்த எச்சரிக்கை தொனியினை கண்டு இலங்கை வாழ் தமிழ் மக்கள் அதிர்ந்து போயுள்ளார்கள் என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரும் இந்திய அரசு தமிழ் மக்களின் வாழ்வில் ஆதாரமாக செயற்படும் பொழுது ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்க முடியாத சுரேஷ் எம்.பியின் இந்திய அரசுக்கு விடுக்கும் கடும் தொனியிலான காலக்கெடு எச்சரிக்கை இலங்கை வாழ் தமிழ் மக்களை அசௌகரியப்படுத்துவதாகவே அமையும்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டாக இருந்தாலும் கூட மக்கள் எதிர்பார்த்ததை போல அது ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அமைப்பாக இன்னமும் மாற்றம் பெறவில்லை என்ற அவரது பகிரங்கமான கருத்து மூலமாக அக்கட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சிலரது நம்பிக்கையை அவநம்பிக்கையாக மாற்ற முயல்கின்றரா அல்லது வட மாகாண சபையில் தனது சகோதரருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடாக தமிழ்க் கூட்டமைப்பை பழிவாங்க முயல்கிறாரா என்பதும் தெரியவில்லை எனவும் பாபு சர்மா தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment