தான் விரட்டுவதற்கு முன் இராஜினாமாச் செய்யுமாறு அமைச்சர்கள் இருவரைக் கேட்கிறார் ஜனாதிபதி!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால், தீர்க்கமான முடிவுகளுடன் ஒன்றித்துப் போகமுடியாதுவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லுமாறு அமைச்சர்கள் இருவருக்கு சென்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது கூறப்பட்டுள்ளது.
அதில் ஓர் அமைச்சர் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசத்திற்கு இலங்கை தொடர்பில் புறம் சொன்னதாகத் தெளிவுறுத்தியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மற்றைய அமைச்சர் பொதுஅபேட்சகராக இன்னொரு அமைச்சரின் உறவினர் ஒருவர் போட்டியிடுவதற்கு தயார்நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் அவர்களை நீக்குவதற்கு முன், அவர்களே அமைச்சரவையிலிருந்து விலகிவிட வேண்டும் எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment