தனக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாகக் குறிப்பிடுகின்றார் சோபித்த தேரர்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அல்லது மகிந்த சிந்தனையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என மாதுலுவாவே சோபித்த தேரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வினவுகின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் அந்த வினாவை முன்வைத்தார்.
ஜனாதிபதி ஆட்சிமுறை காரணமாக நாட்டு சட்டவாக்கத்தில் குறை ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டினுள் அனைத்தும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் தனக்கு 35 வருட அனுபம் உள்ளதாகவும் அவர் தெளிவறுத்துகின்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் மகிந்த சிந்தனை ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெளிவுறுத்துகின்றார்.
இவ்வாறான குரல் எழுப்புவதன் மூலந்தான் தனக்கு கொலை அச்சுறுத்தலும், தனக்கு இழிப்பெயர்களும் வருவதாக மாதுலுவாவே சோபித்த தேரர் கூறுகின்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment