இவரை பற்றி தெரிந்தால் உடனே அறிவியுங்கள்!
படத்தில் இருக்கும் சந்தேக நபரை யாருக்காவது தெரியு மானால் உடனடியாக அட்டன் பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு அட்டன் பொலிஸார் கேட்டுக்கொள்கின் றனர்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பிரதான நகரில் ஒரு உணவகத்தில் உணவு உட்கொள்ள வந்த ஒருவர் தனது கையடக்க தொலை பேசியை தனது மறதியால் அவ்விடத்திலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார். மேற்படி தொலைபேசியை குறித்த உணவகத்திற்கு உணவு உட்கொள்ளவந்த இன்னொருநபர் தனது பைக்குள் தெரியாமல் வைப்பதை அங்கிருந்தசீ.சீ.டீ.வீகெமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் 03.07.2014 அன்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு உட்கொள்ளவந்த நபர் தனது கையடக்கதொலைபேசியை மறதியால் அவ்விடத்தில் வைத்துவிட்டுசென்றுள்ளார். பிறகுஅவர் அவ்விடத்திற்கு வந்து தனது கையடக்க தெலைபேசியை நான்மறதியால் வைத்துவிட்டு சென்றுள்ளேன். ஆதனை யாராவது பார்த்தீர்களா என்று தொலைபேசியை திருடிய நபரிடமே கேட்டபோது அவர் நான் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
எனினும் தொலைபேசியை திருடிய காட்சிகள் குறித்த உணவகத்தில் இருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் பதிவாகியுள்ளது.
மேற்படி சந்தேக நபரை யாருக்காவது தெரியுமானால் உடனடியாக அட்டன் பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு அட்டன் பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment