Tuesday, July 15, 2014

அநுரகுமார கார்ள் மார்க்ஸின் கல்லறையை குண்டுவீசி தகர்க்கப் பார்க்கிறார்! - விக்கிரமபாகு

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கார்ள் மாக்ஸின் கல்லறைக்கு குண்டுவீசி தகர்க்கும்போது, மாதுலுவாவே சோபித்த தேரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சொல்லி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க முற்படுகின்றார் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவிக்கிறார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

“சோபித்த தேரர் அதிகாரப் பரவலாக்கம் செய்து, நாட்டை ஐக்கியப்படுத்தி நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கக் கூடிய ஒருவரைத் தேடினார். ஆயினும் தற்போது அது முழுமையாக மாறி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கூறி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க முயற்சி செய்கிறார்.

மகிந்த ராஜபக்ஷவுக்கும், ரணிலுக்கும் எதிராக பொது அபேட்சகர் ஒருவரை களத்தில் நிறுத்த மக்கள் விடுதலை முன்னணி முயற்சி செய்துவருகின்றது. நாட்டைக் கம்பனிகளுக்கு விற்பதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுக்கவில்லை. அவர்களுக்குத் தேவையாக இருப்பது 17 ஆவது திருத்தச் சட்டத்துடன் வந்து போகும் தேர்தலாகும். அன்று அதிகாரப் பரவலாக்கத்தை தடைச் சொல்லாகக் கொண்டார்கள். சீனாவும், வெள்ளையருக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியும். மாறாக, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது இவர்களுக்குப் பிரச்சினையாகி உள்ளது.

மகிந்த ராஜபக்ஷவை விடவும், அதிகாரப் பரவலாக்கம் செய்யாமல் இருக்கின்ற ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதான் மக்கள் விடுதலை முன்னணியின் தேவைப்பாடாக உள்ளது. “அதிகாரப் பரவலாக்கம் செய்யாதே… சிறுபான்மை இனத்தினரை காலால் மிதித்துத் தள்ளுங்கள்” என்ற நிலைப்பாட்டில் அநுர குமார போன்றவர்கள் இருக்கின்றார்கள்” எனவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment