அட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு! மரணத்திற்கான காரணம் என்ன?? ( படங்கள்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய டீ.எம்.கே.முனசிங்க (வயது – 35) என்பவரின் சடலம் கொழும்பு பதுளை பிரதான ரயில் பாதையில் அட்டன் மல்லியப்பு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இவர் ரயிலில் மோதி உயிரிழந்திருப்பாரா அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் 1 வருடகாலமாக அட்டன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாக தெரிவித்த பொலிஸார் இவர் கண்டி பன்னில பகுதியில் சேர்ந்தவர் எனவும் 2 பிள்ளைகளின் தந்தை எனவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment