பேயை கண்ணால் கண்ட இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள்? திகில் தரும் தகவல்களை வெளியிட்டனர் இங்கிலாந்து வீரர்கள்!
லண்டனில் தாங்கள் தக்கியிருக்கும் ஹோட்டலில் பேய்கள் இருப்பதாகக் கூறி, தங்களது ஹோட்டல் அறைகளை மாற்றித் தருமாறு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. லண்டனில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் லங்கம். லண்டன் (Langham Hotel)லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
ஆனால், தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறைகளில் பேய் இருப்பதாகவும், அதனால் தங்களது மனைவி மற்றும் காதலிகள் பயப்படுவதாகவும் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர் சில வீரர்கள். மேலும் உடனடியாக தங்களது அறைகளை மாற்றித் தரும்படியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த் பிரபல பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் குறிப்பிடுகைகையில், 'இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நான் அந்த அறையில் தான் தங்கினேன். ஒரு நாள் இரவு, மிகவும் வெப்பமாக இருந்தது அப்போது திடீரென குளியலறையில் குழாய் திறந்து நீர் தானாக கொட்டும் ஓசை கேட்டது. நான் எழுந்து விளக்கைப் போட்டவுடன் குழாய் தானாக நீர் நின்று விட்டது.
பின், மீண்டும் விளக்கை அணைத்தவுடன் மீண்டும் குளியலறையில் அனைத்து குழாய்களில் இருந்தும் நீர் வெளியேறும் ஓசை கேட்டது. நான் மீண்டும் விளக்கைப் போட்டதும் ஓசை நின்று விட்டது. இப்படியாக மாறி மாறி நடந்து கொண்டிருந்தது. இச்சம்பவம் மாயாஜாலம் போலிருந்தது' என தன் திகில் அனுபவத்தை விவரித்துள்ளார்.
அதே திகில் அனுபவம் மேலும், மறுநாள் இது குறித்து தனது அணியின் சகவீரர்களிடம் பிரோட் கூறியபோது அவர்களுக்கும் அதே போன்ற அனுபவம் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல பென்ஹோக்ஸ் கூறுகையில், நான் மூன்றாவது மாடியில் இருந்தேன். நிச்சியம் எதுவோ நடக்கிறது. அதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு நாள் நள்ளிரவில் அறைக்குள் யாரோ நடமாடுவது போல இருந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்தது அது என்றார்.
1865ஆம் ஆண்டு இந்த லங்கம் ஹோட்டல் திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில், பேய் நடமாட்டம் இருப்பதாக நீண்ட காலமாகவே ஒரு பேச்சு உள்ளது. அதிலும் அறை எண் 333இல் பெரும் பீதிக்குரிய அறையாக பார்க்கப்படுகிறது. இதை அந்த ஹோட்டலின் இணையதளமே கூறியுள்ளது.
1973 மார்ச் ஆண்டு பிபிசி வானொலியில் பணியாற்றிய ஜேம்ஸ் அலெக்சாண்டர் கோர்டன் என்பவர் இங்கு தங்கியிருந்தார். அப்போது நள்ளிரவில் அவரது அறையில் ஒளிரும் பந்து ஒன்று தெரிந்துள்ளது. அந்த பந்து பின்னர் கால்களற்ற மனித உருவாக மாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 comments :
They waste their time and also time of others, foot ball is will be decided in 2 hrs, endlish peoples find this lazy cricket for lazy indians in colonial time , so they waste their time and not fight against colonial system.
Post a Comment