மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள புலி உறுப்பினர்கள் மீது விசாரணை!
மலேஷிய பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய் யப்பட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைத்துவர ப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் மூவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுடன் இவர் களுக்குள்ள தொடர்பு குறித்து விசாரணைகளின்போது கவனம் செலுத்தப்படு வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் இவர்களுக்கு எதிரான விசாரணை முன்னெடுக் கப்படுவதாகவும் விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்றிரவு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மூவரும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள இனங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
0 comments :
Post a Comment