கூட்டமைப்பின் கன்னத்தில் படுகிறது பளார் என அடி... மீண்டும் வட ஆளுநராக சந்திரசிரி!
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரிக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு சேவை அவர் இன்று பூர்த்தி செய்ய இருந்தார். என்றாலும் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருக்கு சேவை நீடிப்பு செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடக்கின் ஆளுநராக சந்திரசிரி இருப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. இருந்தாலும் சில சக்திகள் அவர் தொடர்ந்து அங்கு கடமை புரிவதற்காக ஆவன செய்ய வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment